செஞ்சரிகள், செஞ்சரிகள் இலங்கை இந்தியா இடையில் நடை பெற்று கொண்டு இருக்கும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வகை தொகையின்றி அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.
முதலாவது இனிங்சில் இந்தியா சார்பாக டோனி, ராகுல் டிராவிட் செஞ்சரி அடித்தார்கள்
இது குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவிக்கையில்
இது எனது மிகவும் ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஒன்று என்று கூறியுள்ளார்.
2002-2003 ஆம் ஆண்டு நடை பெற்ற ஆஷஸ் தொடரி முதல் நாளில் Mathew Hayden அடித்த 186 ரன்களுக்கு (இதில் 23 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்) இணையாக ராகுல் டிராவிட் அடித்த 177 (இதில் பவுண்டரிகளும் 1 சிக்சர்களும் அடங்கும்) ரன்களை ஒப்பிடலாம்.
தோனியும் தனது பங்கிக்கு 110 ரன்களை அடித்து தள்ளியுள்ளார்.
இலங்கை சார்பாக சமீப காலமாக கலக்கிக்கொண்டு இருக்கும்
திலகரத்ன தில்ஷான் 112 ரன்களை அடித்து விளாசியிருக்கின்றார். திலகரத்ன தில்ஷான் எந்த ஒரு கட்டத்திலும் இயல்பாக (Natural Play) விளையாடும் திறமை கொண்டவர்.
அடுத்து சமீப காலமாக சொதப்பி வரும்
மஹேல ஜெயவர்தன தனது 6 அவது இரட்டை சதம் அடித்து தான் எதுக்கும் சளைத்தவன் இல்லை என்பதை துடுப்பால் சொல்லிக்காடியிருக்கின்றார்.
என்னொரு ஜெயவர்தனவும் (அதாங்க
பிரசன்ன ஜெயவர்தன) கலக்கிறார்(88*).
இந்த முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் போது ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பாக்கப்ட்டாலும் போகிற போக்கை பாத்தால் draw இல் தான் முடியும் போல இருக்கு.
கிரிக்கட்டில எதையுமே நம்ப முடியாது. கடைசி வரை இருந்து தான் பாக்க வேண்டும்.